கல்லணை கட்டியது கரிகாலன் அல்ல..!! தமிழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு தெலுங்கர் பெயரா..!!

damp

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன்,

காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட திட்டம் தீட்டினான்.

ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் எவ்வாறு  அணைக்கட்டுவது என பலரும் யோசித்த நிலையில்,

ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் நம் தமிழக பொறியாளர்கள், காவிரியின் குறுக்கே கல்லணையும் கட்டப்பட்டது.

ஆனால் தமிழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு தெலுங்கர் ஒருவரின் பெயர் சொந்தம் கொண்டாடுபடுகிறது..

ஆனால் தமிழன் தான்  அணையை அமைத்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன

இந்நிலையில் தமிழரின் பெருமையை நாம் நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கடமை..

சரி வாருங்கள் பார்போம், கல்லணையின்  மர்மத்தையும் கரிகாலனது சிறப்பையும்..

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையான  இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த சிறப்பு தான்..

திருச்சியில் அகண்ட காவேரி எனப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பாய்கிறது..

கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என  பாய செய்கிறது…

சமீபத்தில் வெளியான “தென் இந்தியாவின் சுருக்கமான வரலாறு ” என்னும் புத்தகத்தில் திரு. சுப்பராயலு என்பவர் கல்லணை கட்டியது கரிகாலன் அல்ல என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளார்..

வெள்ள நீர் வடிவதற்குண்டான வடிகால் அமைப்பை மட்டுமே கட்டியுள்ளார் என கூறியுள்ளார்..

இது  தமிழரின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக உள்ளது..ஏனெனில் கரிகாலன் தான் கல்லணையை கட்டினான் என்பதற்குண்டான ஆய்வுகள், ஆதாரங்களுடன் நம்மிடம் உள்ளது..

இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்த பொறியாளரே, நம் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் பார்த்து வியந்து நம் அணை கட்டும் தத்துவத்தை பிற நாட்டிற்கு பரப்பினர் என்பது குறிபிடத்தக்கது..