ராணுவ வலிமையை அதிகரிக்க புதிய போர்க் கப்பலை அறிமுகப்படுத்திய சீனா

தென் சீனக் கடலில் தற்போது நிலவிவரும் பதற்றங்களுக்கு மத்தியில், தான் உரிமை கோரும் அக்கடற்பகுதியில் தனது உறுதிப்பாட்டினை நிலைப்படுத்தும் வகையில் அதிகளவு முயற்சிகளை பெய்ஜிங் எடுத்துவருகிறது.

சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் சமீபத்திய முயற்சியாக, உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட போர்கப்பலை புதன்கிழமையன்று அறிமுகப்படுத்தியது என சீன அரச ஊடகம் தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் மாதம், முழுவதும் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது இந்த புதிய கப்பல் வெளிவந்துள்ளது.

தென் சீனக் கடலில் தற்போது நிலவிவரும் பதற்றங்களுக்கு மத்தியில், தான் உரிமை கோரும் அக்கடற்பகுதியில் தனது உறுதிப்பாட்டினை நிலைப்படுத்தும் வகையில் அதிகளவு முயற்சிகளை பெய்ஜிங் எடுத்துவருகிறது.

சீனாவின் புதிய 10,000-டன் போர்க் கப்பல் விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

இந்த போர்க் கப்பலில் “புதிய விமான பாதுகாப்பு, ஏவுகணை எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன“ எனச் சீனாவின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனமான ஜின்குவா கூறியுள்ளது.

சிறிய வகை 052டி போர்கப்பல்களின் வாரிசாக, இந்த முதல் வகை 055 போர்க் கப்பல் கருதப்படுகிறது என அரசு நடத்தும் பத்திரிகையான `குளோபல் டைம்ஸ்` கூறுகிறது.