மக்களின் வெறுப்பை சம்பாரிக்கும் ஜூலியின் நிலை இது தான்.!

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு மீது திணிக்கப்பட்ட தடையை எதிர்த்து, தமிழர் கடலாம் மெரினாவில் லட்சோபலட்சம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.

இரவு பகலாக நடந்த இந்த வரலாற்று போராட்டத்தில் பெண்களும், ஆண்களும் ஒன்றாக அமர்ந்தே போராட்டமும் நடத்தினர் சகோதர, சகோதரிகளாக. தமக்கான உரிமைகள் மறுக்கப்படுகையில் கொதித்தெழுவார்கள் தமிழர்கள் சாதி, மதம் கடந்து என்பதனை உலகினுக்கு உரக்கச் சொல்லியது சல்லிக்கட்டு போராட்டம்.

செவிலியர் என்னும் புனிதமான மக்கள் சேவை தொழிலை பார்த்து வரும் ஜூலி தனது வேலையை விட்டுவிட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களமிறங்கியபோது கோடான கோடி தமிழக மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் அதே ஜூலி பணத்திற்காக தன்னுடைய தொழிலை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக மோசமாக திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

ஜல்லிகட்டு புரட்சியால் கிடைத்த புகழை அவர் விளம்பரத்திற்காகவும் பணத்திற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு ஒருவரை எந்த அளவுக்கு உயரத்தில் வைக்க தெரியுமோ அதே அளவுக்கு அதள பாதாளத்தில் தள்ளவும் தெரியும் என்பதை ஜூலிக்கு யாராவது புரியவைத்தால் நல்லது.