விக்னேஸ்வரனுடன் கை கோர்த்த டக்ளஸ் எம்.பி!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தொடர்ந்து அண்மையில் தொலைபேசி ஊடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடக்கின் தற்போதைய நிலைமை குறித்து பேசப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தொடர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.