மக்களின் பரிதாப நிலை : மஹிந்த வெளியிட்ட தகவல்கள்

அரசாங்கம் தனது பலவீனத்தை மறைத்து கொள்வதற்காக தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மத வழிப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாம் இன்று நாட்டை குறித்து சிந்திக்க வேண்டும். மக்களுக்கு இன்று கடுமையான கஸ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அரச அதிகாரிகளுக்கு அன்று இருந்த சுதந்திரம் இன்று இல்லை.

அன்று அரச அதிகாரிகள், கிராம சேவகர்கள் வெளியே சென்று பொருட்கள் கொள்வனவு செய்து இல்லாதவர்களுக்கு கொடுத்தார்கள். இன்று அவை எல்லாம் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள், கிராமத்தின் தேரர் வெளியே செல்லவில்லை என்றால் அந்த மக்கள் இரண்டு நாட்கள் பசியுடன் வாழ நேரிடும்.

இதுவே இன்று அரசாங்கம் முன்னோக்கி செல்ல முடியாமல் இருப்பதற்கு காரணமாகும்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளை மறைத்து கொள்வதற்காக அரசாங்கம் ராஜபக்சர்கள் மீது குற்றம் சுமத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.