குழப்ப நிலையுடன் வடக்கிற்குள் நுழைந்த கருணா

வடமாகாண சபை விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாணத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு நோக்கி சென்று கருணா அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றார்.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றிந்தது.

இந்த கலந்துரையாடல் வவுனியா, கிடாச்சூடி எனும் பகுதியில் முன்னறிவிப்பு எதுவுமின்றி நடந்ததால் அப்பகுதியில் சற்று குழப்பமான சூழல் தோன்றியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே கருணாவின் செயற்பாடு தொடர்பில் வடமாகாண மக்கள் குழப்ப நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஏற்கனவே மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், இந்த கலந்துரையாடல் தொடர்பில் முறையான அனுமதி எதுவும் பெறப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.