இனக் குரோதத்தை தூண்டும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை?

இன மற்றும் மதக் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் செயற்படும் அரசியல் வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் வகையில் உரைகளை நிகழ்த்தும் அரசியல் வாதிகள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான அரசியல் வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.