ஹர்த்தால் அனுஷ்டிப்பால்  வர்த்தகர்களிடையே கைகலப்பு

ஹர்த்தால் அனுஷ்டிப்பு தொடர்பாக கொடிகாமம் பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் கைகலப்பில் ஈடுபட்டதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கண்டித்து வடக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முழு அடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனை ஏற்று கொடிகாமம் பகுதி வர்த்தகர்கள் கடையடைப்புக்கு ஆதரவை தெரிவித்தனர்.

இவ் கடையடைப்பு சம்பவத்துக்கு தமிழரசுக்கட்சியின் ஆதரவு வர்த்தகர்கள் சிலர் வர்த்தக நிலையத்தை திறக்க முற்பட்ட போது இங்கு முறுவல் நிலை ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.