முதலமைச்சருக்கு ஆதரவாக அணிதிரளுமாறு ரவிகரன் அழைப்பு

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக அனைவரையும் அணிதிரளுமாறு வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
வடமாகாணசபை விவகாரம் தொடர்பில் நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணியளவில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.