புலம்பெயர் தமிழர்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் கல்வி இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்த நிலைமை மாற்றமடைந்து புலம்பெயர் தமிழர்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இரத்தினபுரி அயகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அயகம கல்வி கோட்டத்தில் வெள்ளதால் பாதிக்கபட்ட 1200 மாணவர்களுக்காகன கற்றல் உபணங்கள் கையளிக்கும் நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

அயகம ராகுல வித்தியாலயத்தில் ‘புனர்வாழ்வும் புது வாழ்வும்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்களின் உதவியை பெற வேண்டும் என குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை பெற்று இந்த நாட்டை மாத்திரம் அல்ல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் டயஸ்போரா என்றால் மக்கள் மத்தியில் ஒரு அச்சம் இருக்கின்றது என்றார்.