பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு தகுந்த தண்டணை வேண்டும்

நுவரெலியா டயகம மோனிங்டன் மேற்பிரிவு தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவத்திற்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்நிலையிலேயே பாலியல் வல்லுறவில் ஈடுபட முயற்சித்த நபருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் டயகம நகரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது மோனிங்டன் தோட்டத்திற்கு பொது போக்குவரத்து இல்லாமை காரணமாகவே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக பெற்றோர்களும் மாணவர்களும் சுட்டிக்காட்டினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது டயகம நகரில் உள்ள 59 கடைகளும் சுமார் ஒரு மணித்தியாலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.