இந்திய ஜனாதிபதி தேர்தல் எதிர்கட்சிகள் ஆலோசனை

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்க இன்று காங்.தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆலோசிக்கின்றனர்.

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. இதில் பா.ஜ.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளது.

இதற்கு போட்டியாக காங்.தலைமையில் எதிர் கட்சிகளும் ஒன்று இணைந்து வேட்பாளரை நிறுத்த உள்ளனர். இக்கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்தலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆலோசிக்க காங். தலைவர் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றனர். முன்னதாக காங்.சார்பில் குழு அமைக்கப்பட்டு்ள்ளது. இக்குழு உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.