வீடுகள் நிர்மாணத்திற்காக 5 பில்லியன் ரூபா: ஜனாதிபதி நடவடிக்கை

அனர்த்த நிலைமையின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாட்டைத் துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை வீடுகள் நிர்மாணத்திற்காக தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவில் இருந்து 5 பில்லியன் ரூபாவை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனர்த்தத்தின் பின்னரான முன்னேற்றங்கள் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.

அனர்த்த நிலைமையினால் முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மூன்று மாதங்களுக்கு 7500 ரூபா நிதி வழங்கும் திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.