நுவரெலியாவில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி: சந்தேகநபர் கைது

நுவரெலியா டயகம மொனிங்டன் தோட்டத்தில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
17 வயதான குறித்த மாணவி பாடசாலைக்கு செல்லும் போது சந்தேகநபர் அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இதன்போது மாணவி கீழே வீழ்ந்து காயமடைந்துள்ளதுடன் அவருக்குப் பின்னால் சென்ற மாணவர்கள் கூக்குரலிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான மாணவி டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணவியை சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதுவரையில் அதற்கான சாட்சியங்கள் பதிவாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.