சாவகச்சேரி தனங்களப்பில் விபத்து நால்வர் படுகாயம்

சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று மதியம் 2.00 மணியளவில் படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.