விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களே இனப்படுகொலை குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்: அரசாங்கம்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்வாளர்கள், இலங்கை அரசாங்கத்தின் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இந்தநிலையில் இந்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலைமையை தெளிவுபடுத்த புலம்பெயர்ந்த இலங்கையர்களின் உதவி அவசியம் என்று இலங்கையின் பிரதிபாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் படையினர் தமிழர்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகவே போராடினர் என்றும் விஜயவர்த்தன ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்