சர்வதேச ரீதியில் அவமானப்பட்டுள்ள இலங்கை!

இலங்கையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் குற்றம் சுமத்தும் வகையில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பில் பல முக்கிய சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

அவற்றின் பல செய்திகளில் முறைசாரா கழிவு முகாமைத்துவம் காரணமாக இலங்கை ஒரு அசுத்தமான நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

கழிவுகள் மறுசுழற்சி மேற்கொள்ளப்படாமல் உள்ளமை தொடர்பில் ஆச்சரியமடைவதாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் இலங்கையை ஏளனம் செய்யும் வகையில் சர்வதேச ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கழிவு முகாமைத்துவம் இல்லாமையினால் பல்வேறு நோய்கள் ஏற்பட கூடும் என்பதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவது தொடர்பில் பல அழுத்தங்கள் ஏற்பட கூடும் என துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.