ஈரானுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிராட்டல்!

ஈரான் நாட்டில் ஷியாட் முஸ்லீம்கள் அதிக அளவில் காணப்படுகிறனர். சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ், அமைப்பினர் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாடிக்குள் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஈரான் நாட்டிற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் கொலை மிரட்டல் வீடியோ ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

அது 36 நிமிட வீடியோ. அதற்கு,”த பார்சி லேண்ட்: நேற்று முதல் இன்று வரை” என்று தலைப்பு இருந்தது. ஈராக் அருகில் தியாலா மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் சமூக ஊடகம் மூலம் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

வீடியோவில் முகமூடி அணிந்த மனிதன் ஒருவர் ஈரான் தலைவர் அயாடோல்லா அலி கமெனெய்க்கு இந்த மிரட்டல் செய்தியை கூறினார்.

வீடியோவில் மேலும் சிலர் கரம் கோர்த்து இருந்தனர். அதில் ஒருவர் யா ஹோசியன் பேஜ் அணிந்திருந்தான். அது ஷியாட் போராளி என்பதை வெளிப்படுத்துகிறது.