இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இருவர் யார் தெரியுமா ?

வங்கதேச அணியுடனான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணி குழாமிற்கு வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணி 90 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

குறித்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்படாதமையின் காரணமாகவே நுவான் குலசேகர அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவருடன் சேர்த்து வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்பையும் அணியின் குழாமில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நாளை இடம்பெறவுள்ள நிலையில் இவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.