விஜய் ஹசாரே கிரிக்கெட்: பெங்கால் அணியுடன் தமிழகம் இன்று மோதல்

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், மனோஜ் திவாரி தலைமையிலான பெங்கால் அணியும் மோதுகின்றன.

5-வது முறையாக பட்டம் வெல்லும் குறியுடன் தமிழக வீரர்கள் தங்களை தயார்படுத்தியுள்ளனர். அதே சமயம் பெங்கால் அணி ஏற்கனவே 5 முறை இறுதி ஆட்டத்திற்கு வந்து அதில் 4-ல் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.