டெஸ்ட் தரவரிசை: 2-வது இடத்தில் வில்லியம்சன்; கோலி 4-வது இடத்திற்குச் சரிவு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலும், நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவி்ற்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டிலும் ஜொலிக்காத இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் சரிந்து 4-வது இடத்திற்கு சென்றுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இன்னி்ங்சில் சதம் அடித்தார். இதன் மூலம் ஜோ ரூட், கோலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 936 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். கேன் வில்லியம்சன் 869 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், விராட் கோலி 847 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், டேவிட் வார்னர் 794 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சு தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 892 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.