26 ஆண்டுகளுக்குப் பின் தனி டொமைன் பெற்றது ஆப்ரிக்கா!

டிஜிட்டல் யுகத்தைப் பொறுத்தவரை இண்டெர்நெட் உலகமெங்கும் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வரிசயில் ‘com’ மற்றும் ‘org’ போன்ற டொமைன்கள் உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளன. இதில் ‘com’-மை மட்டும் 125.8 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆப்ரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டிற்கு .ao என்ற டொமைனும், ஜிம்பாப்வே நாட்டிற்கு .zw என்ற டொமைனும் புழக்கத்தில் உள்ளது. ஆனால் மொத்த ஆப்ரிக்கா கண்டத்திற்கு என தனி டொமைன் இதுநாள்வரை இல்லை.

இந்த நிலையில், ஆப்ரிக்கா நாட்டிற்கு என .africa என்ற தனி டொமைன் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ZA சென்ட்ரல் ரெஜிஸ்டரி என்ற கம்பெனி இந்த டொமைனை உருவாக்கியுள்ளது. ஜுலை மாதம் இந்த டொமைன் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆப்ரிக்காவில் வெறும் 10.7% வீடுகளே இண்டெர்நெட் இணைப்பைப் பெற்றுள்ளன. அதே நேரம் ஐரோப்பிய நாடுகளில் 82.1% வீடுகளில் இண்டெர்நெட் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.