ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் போட்டியில் தொடர் வெற்றி!

ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகள் மோதிய 20 ஓவர் போட்டி கிரேப்பர் நொய்டாவில் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது அந்த அணி தொடர்ந்து பெற்ற 10-வது வெற்றியாகும். 2016 மார்ச் முதல் அந்த அணி விளையாடிய 10 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி வாகை சூடியது. இதன்மூலம் அந்த அணி புதிய சாதனை படைத்தது.

இதற்கு முன்பு இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன. அதை ஆப்கானிஸ்தான் முறியடித்தது.