ஆஸி.யின் இரண்டு ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவது ஆச்சரியம் அளிக்கிறது: கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான கங்குலி, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷிப் ஷங்கர் பாலின் அகாடமியை திறந்து வைத்தார்.

அப்போது கங்குலி கூறுகையில் ‘‘தற்போது நடைபெற்ற வரும் டெஸ்ட் தொடரில் இரண்டு முனைகளில் இருந்தும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்து வருகிறார்கள்.

இந்த யுக்தியை இதற்கு முன் இந்திய அணிதான் செய்து வந்தது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் இப்படி நெருக்கடி கொடுத்ததை நான் பார்த்ததே இல்லை’’ என்றார்.

புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஓ’கீபே 12 விக்கெட்டும், தற்போதைய பெங்களூரு டெஸ்டில் நாதன் லயன் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்களும் சாய்த்தது குறிப்பிடத்தக்கது.