அதிமுக உடைகிறது? எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள் சுதா பரபரப்பு பேட்டி

அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜய்குமார் ஆவார்.

ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்ட இல்லத்தில் இவர் வசித்து வருகிறார். நாளை எம்.ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி அங்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எம்ஜிஆரின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

அதிமுக தலைமை சசிகலாவுக்கு போனது சுதாவுக்கு பிடிக்கவில்லை எனவும் அதை அவர் எதிர்ப்பார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நிருபர்களை தற்போது சந்தித்த சுதா, எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக என்றும் நிலைக்க வேண்டும்.

கட்சியின் தலைமையை முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் நிர்வாகிகளுக்கு தான் உண்டு.

அதன்ப்படி அவர்கள் சின்னம்மா சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளார்கள், சசிகலாவின் தலைமையை ஏற்று கொள்வதில் எனக்கு எந்நவொரு பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.