அஸ்வின், ஜடேஜாவை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும்: பேர்ஸ்டோவ்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா 4-0 எனக் கைப்பற்றியது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் 352 ரன்கள் குவித்தார். சராசரி 44 ஆகும். விக்கெட் கீப்பராக 11 கேட்சுகள் பிடித்தார்.

இன்றைய 2-வது பயிற்சி ஆட்டத்தில் 64 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து 282 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘நான் அஸ்வின் மற்றும் ஜடேஜாவை நான் டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டு இருக்கிறேன். அவர்கள் சிறந்த திறமையை பெற்றிருக்கிறார்கள் என்பது எங்களுத்துத் தெரியும். ஒருநாள் தொடருக்கான வெள்ளைப் பந்தில் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் நன்றாக ஸ்விங் செய்வார்கள். இதை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள். இதனால் இந்த தொடர் சவாலாக இருக்கும்’’ என்றார்.