2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள்: பிஃபா கவுன்சில் ஒப்புதல்!!

உலகில் உள்ள விளையாட்டு அமைப்புகளில் மிகப்பெரியது பிஃபா என்னும் கால்பந்து பெடரேஷன் அமைப்பு. இந்த அமைப்பில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஆனால் உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்க இயலும். பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் தகுதிச் சுற்று நடைபெறும். அதில் இருந்து 32 நாடுகள் பங்கேற்கும். இதில் போட்டியை நடத்தும் நாடு தகுதிச் சுற்றில் பங்கேற்காமல் நேரடியாக தகுதி பெறும்.

32 அணிகள் என்பதால் பெரும்பாலான முன்னணி அணிகளுக்கு இடம்கிடைக்காமல் இருந்தது. இதனால் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை முடிவு செய்வதற்கான பிஃபா கவுன்சில் இன்று கூடியது. இதில் 48 அணிகள் பங்கேற்க ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் 2026 சீசனில் இருந்து பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்கும். இந்த அணி 16 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம்பெறும்.