சசிகலா பற்றி பரபரப்பு விமர்சனம்! கைதாகிறார் பிரபல நடிகர்?

ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அதிமுக கட்சியிலிருந்து பிரபல நடிகரும், நட்சத்திர பேச்சாளருமான ஆனந்தராஜ் விலகினார்.

இந்நிலையில் அதிமுகவில் தற்போது அங்கம் வகிக்கும் பிரபல நடிகர் மனோபாலா சசிகலாவை கிண்டல் செய்துள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் தனது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா , முதல்வர் ஓபிஎஸ் பற்றிய சர்ச்சைக்குரிய கிண்டல் வாசகத்தை பதிவு செய்து அனுப்பியுள்ளதாக அதிமுக பிரமுகரும், நடிகருமான சினி.சரவணன் சென்னை பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை கொடுத்துள்ளார்.

இதனால் நடிகர் மனோபாலா பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாவார் எனவும், இந்த பொலிஸ் புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை பாயும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது