கொலை குற்றம்! ஒரே குடும்பத்தை 5 பேருக்கு மரண தண்டனை!!

கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்மானித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள். 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி மாத்தறை கோட்டேகொட பிரதேசத்தில் 44 வயதான நபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

காதல் பிரச்சினை ஒன்று காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக வழக்கு விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி தமித் தொட்டவத்த அறிவித்துள்ளார்