அமெரிக்காவின் இந்த அதிரடித்திட்டம் ஏனைய நாடுகளில் எப்போது கிடைக்கும்?

இணைய வலையமைப்பு தொழில்நுட்பத்தில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பங்களில் ஒன்றான WiFi இற்கே அதிகளவு வரவேற்புக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பொது இடங்களில் இலவச WiFi இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் எந்தவொரு நாட்டிலும் இவ் வசதி பூரணமாக வழங்கப்படவில்லை.

இப்படியிருக்கையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள நிலக்கீழ் ஸ்டேசன்களிற்கு பூரணமாக WiFi வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்குறுதி கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தது.

இவ் வசதியானது முதன் முறையாக 2011ம் ஆண்டு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இச் சேவையினை அனைத்து பயணிகளும் பயன்படுத்தக்கூடிய வகையில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடததக்கது.