கீரையால் மூண்டது சண்டை: சிறுமியை தாக்கினார் கீரை வியாபாரி!

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை, வியாபாரி தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சாவகச்சேரி பொதுச் சந்தையில் கீரை விற்றுக்கொண்டிருந்த சிறுமி மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வறுமையின் காரணமாக குறித்த சந்தையில் மலிவு விலையில் கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட 14 வயது மதிக்கத்தக்க சிறுமியை அவருக்கு அருகிலே கீரை வியாபாரம் செய்துகொண்டிருந்த மற்றுமொரு வியாபாரி தாக்கியுள்ளார்.

தான் விற்கும் விலையினை விட குறைவான விலையில் கீரை விற்பனை செய்தமையால் குறித்த சிறுமி தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலில் முகத்தில் பலமாக காயமடைந்த குறித்த சிறுமி சாவகச்சேரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.