நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சூப்பரான தேநீர்!

கொய்யாப்பழம் மட்டுமின்றி அதனுடைய இலை, பட்டை மற்றும் வேர் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.

இந்த கொய்யாபழத்தில் விட்டமின் C, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

கொய்யா இலைகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலை தேனீரின் மருத்துவ பயன்கள்
  • கொய்யா இலைகளை சுத்தமாக கழுவி, அதை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, தேநீர் போன்று தினமும் அருந்தி வந்தால், நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிடும்.
  • நமக்கு பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்கு உடனே கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும்.
  • கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால், நமது உடம்பில் இருக்கும் கெட்டக் கொழுப்புகள் குறைந்து, உடல் பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • இரண்டாவது வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து 12 வாரங்கள் இந்த கொய்யா இலையில் தயாரிக்கப்பட்ட தேநீரை பருகி வந்தால், நமது உடம்பில் சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீரிழிவு நோய் விரைவில் குணமாகிவிடும்.