ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதி: அஸ்வின், விஜய் விலகல்!

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-கர்நாடகா இடையிலான கால்இறுதி ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியில் அஸ்வின், முரளிவிஜய் ஆகியோரும் இடம் பிடித்திருந்தனர்.

ஆனால் இருவரும் கால்இறுதியில் ஆடமாட்டார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசிவிஸ்வநாதன் கூறியுள்ளார். இடுப்பு பகுதியில் லேசான காயத்தால் அவதிப்படுவதாக அஸ்வின் கூறியதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் விஜய், தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று கூறி விட்டார்.