கருப்பு நிற பேட் பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை!

பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இதில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் முதலாவது லீக் ஆட்டத்தின் போது கருப்பு நிற பேட்டை பயன்படுத்தினார். இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியையும் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் கருப்பு நிற பேட்டை பயன்படுத்த அனுமதி கொடுத்த தனது முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று திரும்ப பெற்றது. அத்துடன் கருப்பு நிற பேட்டை உபயோகிக்கவும் தடை விதித்தது. பந்து, கருப்பு வர்ணம் பூசப்பட்ட பேட்டில் படும் போது அதன் வடு பதிகிறது. அப்போது பந்தின் இயல்பான நிறம் கொஞ்சம் மாறுகிறது. இதற்கு போட்டி நடுவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.