இந்திய அணி நல்ல பார்மில் இருக்கிறது: ஜெயசூர்யா!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா அளித்த பேட்டியில், ‘இந்திய அணி நல்ல பார்மில் இருக்கிறது. இதனால்தான் வலுவான அணியான இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை எளிதாக வென்றது.

விராட்கோலி உத்வேகம் மிக்க நல்ல கேப்டன். அவர் பந்து வீச்சாளர்களை அருமையாக வழிநடத்துகிறார். அவரும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கருண்நாயர் ஆட்டம் இழக்காமல் 303 ரன்கள் குவித்தது எளிதான காரியம் அல்ல. இதுபோன்ற மைல்கல்லை எட்ட மிகுந்த பொறுமை அவசியமானதாகும். கருண்நாயருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது’ என்று தெரிவித்தார்.