மெக்சிகோ பட்டாசு சந்தையில் தீ விபத்து: 29பலி, 70 பேர் படுகாயம்!

மெக்சிகோ நாட்டில் துல்திபெக் என்ற இடத்தில், மிகப்பெரிய பட்டாசு சந்தை உள்ளது. இன்றும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமானோர் பட்டாசுகளை வாங்க குவிந்தனர். கடைகளில் பட்டாசுகளை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வெடி மற்றும் வெடிபொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

இந்த விபத்தில் தற்போது வரை 29 பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்புப்பணி நடப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். 70 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.