கிளப் போட்டிகளில் ரொனால்டோ 500 கோல்கள் அடித்து சாதனை!

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் இவர் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

கிளப் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கிளப் அமெரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது அவர் கிளப் போட்டிகளில் அடிக்கும் 500-வது கோலாகும்.

ரியல் மாட்ரிட் அணிக்கு 366 ஆட்டத்தில் 377 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு அவர் விளையாடிய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 118 கோல் அடித்தார். 5 கோல்கள் காட்சி போட்டியில் அடித்துள்ளார்.