ஜெ. மரணத்தில் துலங்கும் மர்மம் : உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாட்டில் பல சர்ச்சை கருத்துகள் நிலவி வருகிறது.

இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து புலனாய்வு குழு விசாரணை செய்ய வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கமெரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அந்த பொது நல மனுவில் உள்ளதாக கூறப்படுகிறது.