என்ன வச்சு பணம், பதவி சம்பாதிக்க நெனச்சா தொலைச்சிடுவேன், சசிகலா

மன்னார்குடி சொந்தங்கள் அனைவரையும் போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றியுள்ளதாக மின்னம்பலம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 9 ஆம் தேதி வேதா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்தை வணங்கி அமைதியாக அமர்ந்திருந்த சசிகலா, சொந்தங்களை நோக்கி நான் சொல்வதை கேளுங்கள் என மெதுவாக பேச தொடங்கினாராம்.

நீங்கள் இங்கு இருப்பது ஊடகங்களில் செய்தியாக வெளியாகி கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள். நான் கூப்பிடும் போது வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

நீங்கள் மட்டும் எப்படி தனியா இருப்பீங்க என இளவரசி கேட்க, அதெல்லாம் பிரச்சனை இல்லை நான் இருப்பேன் என கூறினாராம். எனது செல்வாக்கை பயன்படுத்தி, பணம் காசு, பதவி சம்பாதிக்க நினைத்தால் தொலைத்து விடுவேன் என எச்சரித்துள்ளார்.

இதனால் அதிர்ந்த சொந்தங்களில் பலர் அன்று இரவே வெளியேறிய நிலையில், 10ஆம் தேதி காலை அனைவரும் வெளியேறி விட்டனராம். தற்போது சசிகலா மட்டுமே போயஸ் கார்டனில் உள்ளாராம். திவாகர், வெங்கடேஷ், விவேக் உள்ளிட்ட சிலர் வந்து வந்து செல்கின்றனராம்.