பிரான்சின் மூன்று முக்கிய நகரங்களில் கார்களுக்கு தடை? பொது மக்களுக்கு எச்சரிக்கை!

பிரான்ஸ் நாட்டின் தலைநகருக்குள் புகை அதிகமாக கக்கி உள்ளே நுழையும் வாகனங்களை பொலிசார் தொடர்ந்து மூன்று நாட்களாக தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பாரீஸ் நகருக்குள் நுழையும் கார்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளன.

இதற்கு காரணம் பாரீஸ் நகருக்குள் காற்று அதிகமாக மாசுபட்டு வருவது தான் என கூறப்படுகிறது. காற்று மாசுபாட்டை சமாளிக்க பாரீஸ் நகரம் என்ன முடிவை மேற்கொண்டுள்ளதோ, இதே முடிவை தான் லியோன் மற்றும் விளர்பென் போன்ற நகரங்களிலும் மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து பாரீஸ் நகருக்குள் நுழைய இரட்டை இலக்க எண்கள் கொண்ட கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஒற்றை இலக்க எண்கள் கொண்ட கார்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அதிலும் இரட்டை இலக்கம் கொண்ட கார்களிலும் கார்ஃபூலிங் சேவைகளை கொண்ட கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

கார்ஃபூலிங் சேவை என்பது ஐந்து பேர் அமர்ந்து செல்லக் கூடிய கார்களில் நான்கு பேர் மற்றும் டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர் அமர்ந்திருக்க வேண்டும். அப்படி ஐந்து பேருக்கு கீழ் அமர்ந்திருந்தால் காரானது நகருக்குள் அனுமதிக்கப்படாது.

இந்த நெறிமுறைகளை கடைபிடிப்பதனால் வாகனங்களால் காற்றும், சுற்றுப்புறமும் மாசடைவது ஓரளவு தடுக்கப்படும் என பாரீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் .

இந்த திட்டங்களை மீறி உள்ளே நுழையும் வாகனங்களுக்கு 38 டொலர் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு மூன்று நாட்களில் இதுவரை 1700 கார்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் முடிவுக்கு காரணம் கடந்த சில நாட்களாக பாரீஸ் நகருக்குள் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அதிகபட்ச அளவான 80 மைக்ரோகிராம் அளவினை தாண்டி தற்போது 91 மைக்ரோகிராம் அளவாக அதிகரித்துள்ளது.

இதனால் இது போன்று புகை அதிகம்கக்கும் கார்களை கட்டுப்படுத்தும் போது மாசுபடும் காற்றின் அளவு படிப்படியாக குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 20 வருடத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது நான்காவது முறை ஆகும்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த புதன்கிழமை இப்போக்குவரத்துத் திட்டம் நடைமுறைக்கு வந்ததாகவும், அப்போது பல டிரைவர்கள் குழப்பத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்பிறகு நிலைமை சீரடைந்து தற்போது போக்குவரத்து இயல்பாக இருக்கிறது. பாரீஸ் நகர ஹால் நிறுவனமானது இந்த காற்று மாசுபாடானது குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது.

பாரிஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ கூறுகையில், 2025 ஆம் ஆண்டில் மூன்று முக்கிய நகரங்கள் இணைந்து அனைத்து டீசல் கார்களை தடை செய்யப்போவதாக உறுதி அளித்திருப்பதாகவும், இந்த காற்று மாசுபடல் பல சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு கார் மற்றும் பஸ் உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் சாத்தியம் எனவும் கூறியுள்ளார்.