காதலியை ஏமாற்றி எய்ட்ஸ் நோயை பரப்பிய கொடூரன்: நீதிமன்றம் அதிரடி

பிரான்சில் நபர் ஒருவர் தெரிந்தே பெண்ணிற்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gard பகுதியை சேர்ந்த 39 வயதான Rui Filipe Da Rocha என்ற நபரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு தான் எய்ட்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த Rui Filipe Da Rocha, Vanessa என்ற 15 வயது பெண்ணுடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.

2006ம் ஆண்டு Vanessa தானும் எய்ட்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

ஆனாலும், சில மாதங்கள் அவர் எவ்வித பாதுகாப்புமின்றி Rui Filipe Da Rochaயுடன் பழகி வந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் எச்.ஐ.வி பாதிப்பின்றி குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், Rui Filipe Da Rochaவை பிரிந்த Vanessa கடந்த 2010ம் ஆண்டு Rui Filipe Da Rochaவால் மற்றவர்கள் யாருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடக் கூடாது என புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் Vanessa தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் Filipe Da Rochaவுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் படி வாதாடியுள்ளார்.

இறுதியில் நீதிமன்றம் Filipe Da Rochaவுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.