குழந்தைகளுக்கு எண்ணை மசாஜ் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய செய்யத் தான், அவர்களது எலும்புகள் வலுவடைவதோடு, வளர்ச்சியும் சீராக இருக்கும்.

எனவே பிறந்த குழந்தைக்கு தினமும் குளிப்பாட்டுவதற்கு முன் சிறிது நேரம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

எப்போது குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதாக இருந்தாலும், இயற்கை எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்கு எந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய் :

பெரும்பாலானோர் உடல் மசாஜ் என்றால் தேங்காய் எண்ணெயைத் தான் பயன்படுத்துவார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இந்த எண்ணெயை வெதுவெதுப்புடன் சூடாக்கி, மசாஜ் செய்தால், சருமம் நன்கு மென்மையாகவும், எலும்புகள் வலுவுடனும் இருக்கும்.

கடுகு எண்ணெய் :

தற்போது நிறைய வீட்டில் கடுகு எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேலும் உடலுக்கு மசாஜ் செய்யவும், பலர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். இதனைப் பயன்படுத்துவதால், உடல் வெதுவெதுப்புடனும், எலும்புகள் வலுவுடனும் இருப்பதோடு, சளி மற்றும் ஜலதோஷம் இருந்தால், நல்ல நிவாரணமும் கிடைக்கும்.

குறிப்பாக இந்த எண்ணெயை குளிர்காலத்தில் பயன்படுத்துவது நல்லது. அதிலும் வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு உடலுக்கு மசாஜ் செய்தால், தேவையற்ற இடங்களில் வளரும் முடியை தவிர்க்கலாம்.

குறிப்பாக குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான மசாஜ் செய்தால், தேவையில்லாமல் குழந்தை அழுவதைத் தடுக்கலாம்.

ஒலிவ் ஒயில் :

ஒலிவ் ஒயில் முடியின் வளர்ச்சிக்கு சிறந்தது. ஒருவேளை குழந்தைக்கு முடி வளர்ச்சி குறைவாக இருந்தால், ஒலிவ் ஒயில் கொண்டு மசாஜ் செய்தால், முடி வளர்ச்சியானது அதிகரிக்கும்.

அதிலும் இந்த எண்ணெயை உடல் முழுவதும் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளிப்பாட்டினால், எலும்புகள் வலுவடைந்து, உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

இவையே குழந்தைகளுக்கு மசாஜ் செய்யப் பயன்படுத்தும் எண்ணெய்கள். ஒருவேளை குழந்தைக்கு இந்த எண்ணெயால் அரிப்பு ஏற்பட ஆரம்பித்தால், இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடவும்.

முக்கியமாக, குழந்தைக்கு எந்த எண்ணெயை பயன்படுத்த நினைத்தாலும், முதலில் அவர்கள் அணிந்திருக்கும் அனைத்து ஆபரணங்களையும் அகற்றிவிட்டு, பின் தொடர வேண்டும்.