கள்­­ளக்­காதல் விவ­காரத்தில் தன்னை கொல்­லத்­திட்­ட­மிட்ட கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி..! – எப்படி தெரியுமா..?

கள்­ளக்­காதல் விவ­கா­ரத்தில் தன்னைக் கொல்லத் திட்­ட­மிட்­டி­ருந்த கண­வ­ரி­ட­மி­ருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனைவி கணவனை வெட்டிக் கொலை செய்த செயல் அண்­மையில் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்ளது.

தமி­ழ­கத்தின் திருச்­செந்தூர் அருகே உள்­ளது நடு­நா­லு­மூ­லைக்­கி­ணறு புது­கா­லனி. இப் ­ப­கு­தியைச் சேர்ந்­தவர் சங்­கிலி மாடன். 36 வய­தான இவர் ஒரு கூலித் தொழி­லாளி.

இவ­ரது மனைவி சாந்தி. இவர் சமையல் வேலை செய்து வரு­கிறார். இவர்­க­ளு க்கு 16, 10, 8 வயதில் 3 மகன்கள் உள்­ளனர். இத­னி­டையே அங்கு பணி புரியும் சாந்­திக்கும், முடி­சூடும் பெருமாள் என்­ப­வ­ருக்கும் இடையே கள்­ளக்­காதல் இருந்து வந்­தது.

இரு­வரும் அடிக்­கடி சந்­தித்து உல்­லாசம் அனு­ப­வித்து வந்­தனர். இது சங்­கி­லி­மா­ட­னுக்குத் தெரியவந்­தது. மனை­வியை கண்­டித்துள்ளார். ஆனால் அவர் கணவனின் பேச்சைக் கேட்பதாக இல்லை. இதனால் இரு­வ­ருக்கும் இடையே வாக்­கு­வாதம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் இரு நாட்­க­ளுக்கு முன்பு சங்­கி­லி­மாடன் கொலை செய்­யப்­பட்டார். அவரைக் கொலை செய்­தது மனைவி சாந்­தி தான் என பொலி­ஸாரின் விசா­ர­ணையில் தெரிய வந்­துள்ளது.

விசா­ர­ணை­யின்­போது சாந்தி பொலி­ஸா­ரிடம் கொடுத்த வாக்­கு­மூ­லத்தில், எனக்கும் முடி­சூடும் பெருமாள் என்­ப­வ­ருக்கும் தொடர்பு இருந்­தது கணவர் என்னை கண்­டித்தார்.

இதனால் எங்களுக்குள் தக­ராறு ஏற்­பட்­டது. சம்­ப­வத்­தன்று இர­விலும் சங்­கி­லி­மாடன் என்­னிடம் இத் தொடர்பை கைவி­டு­மாறு கூறினார். இதில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

அப்­போது எனது கணவர் என்னை கொலை செய்­து­வி­டுவேன் என மிரட்­டினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உறங்கச் சென்று விட்டார். உறங்கப் போகும்­போது தலை­ய­ணைக்குக் கீழ் அவர் அரி­வாளை பதுக்க வைத்­ததைப் பார்த்து விட்டேன்.

என்னைக் கொல்­லத் தான் அவர் வைத்­த­தாக கரு­தி இரவு முழு­வதும் உறங்­காமல் விழித்திருந்தேன். நள்ளிரவைத் தாண்டியதும், எழுந்து அந்த அரிவாளை எடுத்து கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன் என சாந்தி தெரி­வித்­­துள்ளார்.