விஜய் குறித்து திடுக்கிடும் தகவல்!

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வியாபாரிகளை சந்தித்த எச்.ராஜா 500, 1000 ரூபாய் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, ஊழல் செய்தவர்களும், கொள்ளை அடித்தவர்களும் தான் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறினார்.

அப்போது மோடியின் இந்த அறிவிப்புக்கு நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த எச்.ராஜா, நடிகர் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதால் அவருடைய கையில் பணம் எதுவும் இருக்காது.

எனவே அவரிடம் கருப்பு பணம் இல்லாத காரணத்தால் அவர் மோடியின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்.ஆனால், நடிகர் விஜய் கையில் கருப்பு பணம் இருக்கும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

நடிகர் விஜய் சமீபத்தில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றும் அதே நேரத்தில் மக்கள் படும் துயரையும் எடுத்துக்கூறினார்.

இதனால் அப்பொழுதே பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்தார். தற்போது எச்.ராஜா அவரிடம் கருப்பு பணம் உள்ளதாகவே நினைப்பதாக கூறியுள்ளார்.