திருமணத்திற்கு பின் ஆண்களின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்?

திருமணம் நடைபெறுவதற்கு முன் சில ஆண்கள் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் இருப்பார்கள்.

ஆனால் திருமணம் முடிந்தவுடன் இரண்டு அல்லது மூன்று மாதங்களிலே அவர்களின் உடல் எடை சற்று அதிகரித்துக் காணப்படும்.

எனவே திருமணத்திற்கு, பின் ஆண்களின் உடல் எடையானது அதிகரிக்க என்ன காரணம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

திருமணத்திற்கு பின் ஆண்களின் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம்
  • ஆண்கள் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். எனவே ஆண்களின் மனது அதிக சந்தோஷத்தினை அடைவதினால், அவர்களுக்கு உடல் எடையானது அதிகரிக்கிறது.
  • திருமணம் முடிந்து மணமக்கள் நிறைய விருந்துகளுக்கு செல்வதால், தங்களின் உடல் நலன்களை பார்ப்பதற்கு அதிக நேரம் கிடைக்காமல் இருக்கும். இதனால் ஆண்களுக்கு உடல் எடை அதிகரிக்கிறது.
  • திருமணத்திற்கு முன்பு உடற்பயிற்சிகள் மற்றும் ஜிம்மிற்கு செல்லும் ஒருசில ஆண்கள், திருமணம் முடிந்த சந்தோஷத்தில், போதுமான நேரமின்மைக் காரணமாக ஜிம்மிற்கு செல்வதை நிறுத்தி விடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரித்து விடுகிறது.
  • திருமணத்திற்கு முன்பு டயட் இருக்கும் சில ஆண்கள், திருமணத்திற்கு பின் புது மனைவியின் கைப்பக்குவம், விருந்து போன்ற காரணங்களுக்காக டயட் முறையை பின்பற்றுவதை நிறுத்தி விடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரித்து விடுகிறது.
  • அன்றாடம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவை விட திருமணத்திற்கு பின் தங்கள் மனைவின் அன்பினால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால் உடல் பருமன் அதிகரித்து தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.