பிரித்தானியாவின் காதல் மன்னன் இவர் தான்

ஏற்கனவே எட்டு முறை திருமணம் செய்த 68 வயது முதியவர் ஒருவர் ஒன்பதாவது முறையாக அவரை விட 42 வயது குறைவான ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் ரான் ஷெப்பர்ட் (68). காதல் மன்னனான இவர் இதுவரை எட்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். 1966 ஆம் ஆண்டு தனது 19வது வயதில் முதல் பெண்ணான Margaretஐ திருமணம் செய்தார் ஷெப்பர்ட்.

முதல் மனைவியை 1968 வருடம் விவாகரத்து செய்தவர் பின்னர் பல திருமணங்கள் செய்து கடந்த 2004 ஆண்டு Weng என்னும் பெண்ணை 8வதாக திருமணம் செய்தார்.

இப்போது ஒன்பதாவதாக Cristel ஏன்னும் பெண்ணை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளார். இவர்கள் இருவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயதார்த்தம் ஆகி விட்டது.

இது குறித்து கல்யாண மன்னன் ரான் ஷெப்பர்ட் கூறுகையில், என் ஒவ்வொரு திருமணமும் ஏதோ ஒரு காரணங்களுக்காக தோல்வியில் முடிந்தது.

ஆனால் நாம் இப்போது திருமணம் செய்யவிருக்கும் Cristel மீது மிகுந்த காதல் கொண்டுள்ளேன். அவர் தான் நான் திருமணம் செய்யவிருக்கும் கடைசி பெண்ணாக இருக்கும் என கூறியுள்ளார்.

முதியவர் ரானை திருமணம் செய்யவிருக்கும் Cristel கூறுகையில், என்னை விட 42 வயது குறைந்தவர் ரான் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. அவர் என் மேல் அன்பாக மற்றும் அக்கறை கொண்டவராக இருக்கிறார்.

மேலும், நீ தான் இறுதி வரை எனக்கு மனைவி என அவர் கூறியுள்ளார். அதை தான் நம்புவதாகவும் திருமணத்தை ஆவலாக எதிர்நோக்க்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.