கியூபாவில் திருமணமாகி சிக்கி சின்னாபின்னமாகும் தமிழர்கள்!

கனடாவிலுள்ள தமிழர்களிற்கு விடுமுறைக்குச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருப்பது கியூபா. அங்கே பல தமிழர்களிற்கு குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மை தற்போது கியூபர்களாலேயே வெளிக் கொணரப்படுகின்றது.

அண்மையில் வாகணங்கள் திருத்தும் நிலையத்திற்கு சென்ற ஒருவர் கிழக்கு ஐரோப்பியரான வாகணந் திருந்துனரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது அவருக்கு திருமணமாகி விட்டதா எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த மேற்படி வாகணந் திருந்துனர் தான் வருடத்திற்கு இரண்டு முறை கியூபாவிற்கு சென்று வருவதாகவும் அங்கேயுள்ள ஒரு கியூபப் பெண்ணை தனது காதலியாக வைத்திருப்பதாகவும் கூறினார்.

அப்போது அவரை எப்போ இங்கே அழைத்து வரப் போகின்றீர்கள் எனக் கேட்ட போது, அவர் இங்கு அழைத்து வருவதற்காக அல்ல, அவர் அங்கேயே தான் தொடர்ந்து இருப்பார். நான் வருடாவருடம் சென்று வருவேன் எனத் தெரிவித்தார்.

கதையோடு கதையாக நீங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர் என கார் திருத்தச் சென்றவரிடம் கேட்க அவர் நான் ஒரு தமிழன் சிறீலங்காவைச் சேர்ந்தவன் எனத் தெரித்தார்.

பலமாகச் சிரித்த கார் திருத்துனர் என்னுடைய காதலி இருக்கும் தெருவில் சில தமிழர்களும் காதலிகளை வைத்திருக்கின்றார்கள். அந்தத் தமிழர்கள் வண்டியும் தொந்தியுமாக ஏற்கனவே கல்யானம் செய்து இங்கே மனைவி, பிள்ளைகளை வைத்துக் கொண்டு அங்கு களவாகக் குடும்பம் வைத்திருக்கின்றார்கள் என்றார்.

இதனை கேட்ட தமிழருக்கு இருக்கப் பொறுக்கவில்லை. அவர் சட்டஞ்சார்ந்த துறையில் பணியாற்றும் தனது நண்பரிடம் இதுபற்றிக் கேட்ட போது,

அவர் இது உண்மை, பல குடும்பங்கள் இதனால் பிரிந்திருக்கின்றன. அமெரிக்காவிற்குச் வேலை நிமிர்த்தமாக ஒரு வாரம் செல்கின்றேன், ஐரோப்பாவிற்குச் ஒரு வாரம் செல்கின்றேன் எனக் கூறிகியூபா சென்று வருபவர்கள் அங்கேயுள்ள கியூப மனைவிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட சம்பங்களை இவருடன் பகிர்ந்தார்.

அதாவது கியூபப் பெண்கள் தங்களிற்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன் இங்குள்ள மனைவியுடன் தொடர்பு கொண்டு உண்மைகளை உடைத்துப் போடுகின்றார்கள். இதனால் இங்குள்ள குடும்பங்கள் பிரிய அகப்படும் நபரோ கியூபப் பெண்மணியே தஞ்சம் என்று தொடர்ந்து சென்று வருகின்றார்.

இன்னொரு விவகாரத்தில் ஒருவர் டூபாயில் ஒரு வியாபார முயற்சி சம்பந்தமாக பேசப் போகின்றேன் என மனைவியிடம் கூறி கியூபாவிற்குச் செல்ல, அந்த நபரின் தமையனாரே இல்லை உணது கணவர் கியூபாவிற்குச் சென்று விட்டார். எனது நண்பர் அங்கே கண்டார் எனக் கூற அந்தக் குடும்பமும் பிரிந்தது.

இன்னொருவரோ கடற்கரையில் இரவுப் பொழுதென இரண்டு பதின்ம வயதுப்பெண்களைக் கட்டித் தழுவியபடி செல்ல, அந்த இருட்டிலும் அவரை அடையாளம் கண்ட உண்மையான விடுமுறைக்குச் சென்ற தமிழ் இளைஞர்கள், நாயே நீ உண் பெண்பிள்ளையின் வயதையுடைய பிள்ளைகளை அநியாயமாக்குகிறாய் என அவரது முகத்தில் துப்பியது போது,

அவருடன் இருந்த பெண்கள் தப்பியோட அவர் எதுவும் நடக்காத மாதிரி சென்றதாகவும் மேற்படி நபருக்குத் தெரிவித்திருக்கின்றார். எனவே கனடாவிலுள்ள தமிழ்ப் பெண்களின் குடும்பங்களைச் சிதைக்கும் நபர்களாக கியூபப் பெண்கள் மாறியுள்ளதும்,

அதேவேளை கியூபாவிற்குச் சென்று அங்குள்ள பெண்களிற்கு வாழ்வு கொடுக்கும் நபர்களாக மணமுடித்த தமிழர்கள் “சிலர்” மாறியிருப்பதும் தமிழர்களின் ஒரு சமுதாயச் சிதைவாகவே பார்க்கப்படுகின்றது.

இன்னொரு தமிழரோ கனடாவிலேயே தனது குடும்பஞ்சார்ந்த பார்ட்டி ஒன்றிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு மதுபோதையில் வந்தவர். மனைவி எரிபொருள் நிரப்ப, காசு கொடுப்பதற்காக உள்ளே சென்றவர். பணம் பெறுபவராக நின்ற கியூபப் பெண்ணுடன்,

சரளமாக ஸ்பானிய மொழியில் உரையாடி, தனக்குப் பின்னால் மனைவி நிற்பதையும் கவனிக்காமல், தான் கியூபாவிற்கு அடிக்கடி சென்று வருவதாகக் கூறி “மங்களகரமாக” எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே வாங்கிக் கட்டி, இப்போது குடும்பத்திலிருந்து அப்புறப்படுத்தி வைத்திருக்கின்றப்பட்டுள்ளார்.

இன்னமும் சிலரோ குடும்பத் துணையைப் பிரிந்து வாழ்ந்து வருகின்ற படியால், நான் மன ஆறுதலிற்காக இந்தியா சென்றேன், ஐரோப்பாவிலுள்ள நண்பர்களைப் பார்க்கச் சென்றேன் என்று வாலி பட அஜித் பாணியில் இரண்டு மனநிலைகொண்டு கியூபாவை நாடிச் செல்கின்றனர்.