யாழில் அடைமழையால் மக்கள் பாதிப்பு

யாழில் பெய்துவரும் அடைமழை காரணமாக, யாழ். ஜே-87 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பொம்மைவெளி கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இடம்பெயரும் நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.
சுமார் 40 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் சீரான வடிகாண் வசதி இல்லாமையால், வெள்ளநீர் வீடுகளுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். பொம்மைவெளி அபூபக்கர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான் குறிப்பிட்டார்.
இதனால் இம் மக்கள் தமது அன்றாட உணவையேனும் சமைத்து உண்ண முடியாத நிலையில் உள்ளனர்.23ed