தீவிரவாத தாக்குதல்களை தடுக்க கழுகுகளுக்கு பயிற்சி

பிரான்ஸ் நாட்டில் ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை தடுக்க கழுகுகளுக்கு அந்நாட்டு விமானப்படை பயிற்சி அளித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதா தாக்குதல்கள் பெருமளவில் நிகழ்ந்து பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத தாக்குதல்களை தடுக்க போதிய ராணுவ ஆயுதங்கள் இருந்தாலும் கூட, இதனை மேலும் சிறப்பாக செயல்படுத்த விமானப்படை முடிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த சிறிய ரக விமானங்களை நடுவழியில் தடுத்து நிறுத்தி தரைக்கு கொண்டு வரும் பயிற்சியினை கழுகுகளுக்கு பொலிசார் பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதன் முதற்கட்டமாக, கழுகு முட்டைகளை வாங்கி அதனை பாதுகாக்கின்றனர். பின்னர், முட்டைகளில் இருந்து வெளியேறும் பிஞ்சு கழுகுகளுக்கு அந்த நாள் முதலே பயிற்சி அளிக்க தொடங்குகின்றனர்.kaluku

அதாவது, ட்ரோன்களில் கழுகுகள் சாப்பிடும் இறைச்சி துண்டுகளை வைத்து பறக்கவிடுகின்றனர்.

ட்ரோனில் இறைச்சி இருப்பதை கழுகுக்கு பயிற்சி அளித்து அதனை பிடித்துக்கொண்டு தரைக்கு கொண்டு வருகிறார்கள்.

இதேபோன்று பயிற்சி அளித்து பின்னர், இறைச்சி இல்லாமலேயே ட்ரோன்களை பிடித்து தூக்கி வரும் பயிற்சியையும் பொலிசார் அளித்து வருகின்றனர்.

தற்போது வரை கழுகுகள் இதில் நன்றாக தேறி வருவதாகவும், அடுத்தாண்டு முதல் இத்திட்டத்தை அமுலாக்க முயற்சி செய்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.