காதலனுடன் பிரபல பாலிவுட் நடிகையை குத்திய திருடர்கள்: அதிர்ச்சியில் நடிகை

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா செராவத் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் பிரபல அமெரிக்க மொடல் கிம் கர்தாஷியனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட பகுதிக்கு அருகேயே தற்போது இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தின் போது 40 வயதான மல்லிகா செராவத் தனது 45 வயதான பிரஞ்சு காதலர் Cyrille Auxenfansயுடன் பாரிஸில் உள்ள தனது குடியிருப்பில் நுழைந்துள்ளார்.

அப்போது, முகமுடி அணிதிருந்த மர்ம நபர்கள் கண்ணீர்ப்புகை தெளித்து இருவரையும் கடுமையாக கைகளால் குத்தி தாக்கிவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதைக்கண்ட நண்பர் ஒருவர் உடனே அவசர சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது குற்ற சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகள் கொள்ளை முயற்சி செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.